செவ்வாய், 4 நவம்பர், 2008

பாவம் அது...



என் வீட்டு நாய்க்குட்டி
மிகவும் மோசம்.

எப்போதும்
என் முகத்தையே
பார்த்துக் கொண்டிருக்கும்.

எங்கு போனாலும்
என் கூடவே வருகிறது.

அதற்கு எல்லாவற்றுக்கும்
நானே தான் வரவேண்டும்.

ஏனோ...
எப்போதுமே என்னோடு வாழவே
ஆசைப்படுகிறது.

வேறு வசிப்பிடத்தைக்
காட்டினாலும் அங்கு
போகவும் மறுக்கிறது.

என் காலடியில் கிடந்தபடியே
வாழ்வை முடிக்க
பிரியப்படுகிறது போலும்...

அதை நினைக்கையில்
எனக்கும் வேதனை தான்.

தவறு தான்.
ஆரம்பம் முதலாய்
அதற்கு அன்பு
காட்டியிருக்கக்கூடாது.
அதை அரவணைத்திருக்கவும்
வேண்டாம்.

அதுவும் பாவம்.
வீட்டில் வேறு எவரும்
அரவணைப்பதற்கில்லை.

நானும் எங்கோ
தூரம் சென்றுவிடப்போவது
அதற்கும் விளங்கியிருக்க வேண்டும்.
சில நாளாய்
அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது.

நானும் பரிதாபம்.
என்னாலும் அதை
கூடவே கூட்டிப்போக முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்