சனி, 15 ஆகஸ்ட், 2026

கனவுகளின் கதை

நேற்றைய இரவை

கனவுகள் 

ஆக்கிரமித்திருந்தன.


பார்வையில்  

விலகிப்போயிருப்பினும்

நீ  

எனது அனிச்சைகளில்

மெலிதான 

உன் வாசனையை

எப்போதும் போல 

பரவவிடுகின்றாய்.


பறிபோன 

அண்மைகளின் சாயலை

விழித்திரை முழுவதும்

நீ 

உனது வண்ணங்களால் பூசிக்கொண்டிருந்தாய்.


மனதில் வழியும்

ரணங்களின் ரேகைகளைக் 

கொண்டு

நீ 

பூக்களின் கொலைகாரி

என்பதை

மீண்டும் நிரூபிக்கின்றாய்.


அதிகாலையின்

அலார இரைச்சலில் 

என்னைக் கேளாமலேயே

 நீ

ஈரலித்திருந்த கண்களில்

அர்த்தமற்றுக்

கரைந்து விடுகின்றாய்.


உன்னை தவறவிட்ட 

கண்களை

ஒவ்வொரு தடவையும்

எப்படித் தண்டிப்பது.

 

நினைவுகள் சிதைய

இன்னும் நீண்டகாலம் 

ஆகலாம்.

15/08/2026.  18:29 pm

சம்பூர் வதனரூபன்

 

விழியோடல்கள்