இருளில் சேமித்த முகங்களை
ஒளியில் தொலைத்துவிடுதல் என்பது கவனயீனம் அல்லாமல் வேறென்ன.
இழந்தவைகள் எல்லாம்
தொலைத்தவைகள் மட்டும் அல்ல.
கைவிட்டப்பட்டவைகளும் அடங்கும்.
வாழ்தலின் போது சிலிர்த்த காலங்களில் இருந்து அற்புதங்களை தேர்ந்ததும் அல்லாத தவறுதல்களை தேடி தண்டித்தல் வேறுவித மனநிலை.
இங்கு குறைக்கப்படுதல் என்பதே உண்மையில் வெறுக்கப்படுதல்.
அன்பெனும் சொல்லின் பெறுமதிநினைத்திருத்தலில் அல்ல.
அது இடையறாத நேசிப்பிலும் அல்ல. நிகழ்த்துதல்களின் எண்ணிக்கைகளில் வீரியம் பெறும் என்பதே
அற்றுப்போதலில் தான் புரிகின்றது
தீர்மானிக்கப்படும் நியாயங்களின் பின்மழிக்கப்படுகின்ற நீதிபதியின் பேனாமுனை போல உனக்கான
இறுதி வரிகளுடன் நினைவுகள் மழிகின்றன.
சம்பூர் வதனரூபன் 03/05/2026. 07.53 pm