இரவின் அடர்ந்த இருட்டை எதிர்க்கும்
சாலை விளக்குகளின் துணிவு
கண நேரத்தில்
எனக்குள் தைரியத்தை ஊட்டிவிடுகிறது.
முந்துவதும் பின்தள்ளப்படுவதுமாக
நகரும் வாகனங்கள்
நடைமுறை வாழ்க்கை நியதியை
நம்ப வைக்கின்றன.
பாதையைக் குறுக்கிடத் தடுமாறும்
வயோதிபரின் அவசரத்தில்
எல்லோருமாக வாழ்நாட்களை
சுவாரசியம் அற்றதாக்கிவிடுகிறோம்.
[16/12/2025, 6:47 pm]
சம்பூர் வதனரூபன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக