ஞாயிறு, 7 டிசம்பர், 2025

மூடுபனியுள் தொலைந்த நகரில் 

இரவும் பகலும் சுயமிழந்த பொழுதொன்றில்

நீ நானாய் இருக்கிறாய்.


சூறைமழையின் ஈரப்பிசுபிசுப்பில்

கூதல் குருவிகளின் காதல் கழிவுகளை தேடிப்பொறுக்கிச் சுமந்து 

எறும்புகள் பதுக்குகின்றன.


பேரூந்தின் சாளரங்களூடே 

பின்னோடும் மரங்களைப் போல் 

நெருக்குவாரச் சாலையில்

வெள்ளைப் பன்றியென

சலனமேதுமின்றி கடக்கிறாய்

விதி.


நீ அறுபட்டிருக்கும் இந்நாட்களில்

வேறுவித மனநிலை

உளத்தல் இரவோடும் உளைச்சல் மனதோடு

நினைவு தப்பத் தப்ப உலாத்துகிறேன்

நீ பத்திரம்.


நீ உன்னோடு மட்டும் உயிர்க்கிறாய்.

உனது இருத்தல் அசாத்திமானதும் ஆர்ப்பரிப்பற்றதும்

ஆயினும்

குழுவாசிகளை குழப்பமடைய செய்வதாயிருக்கிறது

போகட்டும்.


இப்பன்றிமய்ய வாழ்தலில்

முடிந்தவரை உனதையும் நிறுவு.


Day and night lost in the city

lost in the fog

In a moment you are me.


Ants lurk 

in the wetness of monsoon rains 

carrying sparrows' love waste.


Like the trees 

behind the bus windows

You cross the narrow road 

like a white pig 

without temptation. 

fate.


In these days when you are cut,

I in a different mood

with a troubled mind at night

I wander to escape the memories.

you bond.


You live only with yourself. 

Your presence is impenetrable and 

unappealing.

However


To confuse the group members

is doing.

Let it go.


Establish yours 

as much as possible 

in this knowledge.

                                     -சம்பூர் வதனரூபன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்