இருள் கவிந்த துர்சகுனங்கள்
உணர்த்திய
இன்றைய முன்னிரவில்
அவளன்றிப் போனாலும்
நெடுநாள் கழிந்து
முழுநிலவைக் காணமுடிகிறது.
தட்டையென ஏமாற்றும் இயல்பற்ற
அதன் வட்ட முகத்தை
சிறு புன்னகையோடு
இன்று எதிர்க்க முடிந்தது.
அருகே
ஒளி மங்கிய ஒரு நட்சத்திரம்
துடித்ததும் .
நினைவுகளால் ஆன மேகவலை படர்ந்ததையும்
என் மனநிலையென
ஏற்க முடியவுமில்லை.
மனிதர்கள் சுயநலம் மிக்கவர்கள்.
மனிதர்களாகவும்
மனிதர்கள் உள்ளுமே வாழ்கிறோம்.
[03/12/2025, 8:56 pm]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக