ஞாயிறு, 7 டிசம்பர், 2025

கறை நல்லது


நிச்சயப்படுத்த முடிந்திராத பல காட்சிப்பிழைகளுக்குள் இருந்து

மிக நிதானமாக

உனக்கான அற்புதங்களை தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளாய்.


இழக்கப்பட்ட அண்மைகளில் 

நகர்ந்து போன 

அத்தனை தருணங்களையும் 

நீ கைவிட்டுப் போன 

வெறுமை தோய்ந்த நாட்களின் 

தனிமையில் உணர்ந்தேன்.


நீ முழுவதுமாக  கரைந்து போய்விட்ட மனதில்

இன்னும் ஏனோ 

உன் சாயல் நினைவுகள்

சலவைக்கும் மங்காத 

காய்ந்த கறைகளைப் போல

அப்பிக் கிடக்கின்றன.


நான் எதுவாகிப் போயிருக்கின்றேன்.

உன்னை எவ்வாறாக உணர்கின்றேன்.

என்பதெல்லாம் இனி 

உனக்கும் அவசியமற்றவைகளாயின.


[01/11/2025, 5:28 pm]

சம்பூர் வதனரூபன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்