ஞாயிறு, 7 டிசம்பர், 2025

நினைவில் தொலைதல்














சொல்லாமல் போகிறவர்களை விட்டுவிடுங்கள்.

பகிர முடியாத வலிகளை இழுத்துக்கொண்டு போகிறவர்கள்

கனவுகளாலும் கற்பனைகளாலும் ஏமாற்றபட்டிருப்பார்கள்.

நிறுத்தி

பரிதாபங்களால் 

மேலும் வதைத்துவிடாதீர்கள்.

போகட்டும்.

வாழ்வின் இயல்பை புரிந்துகொண்டு

மீள வழிதேடி அலையட்டும்.

காலச் சுழற்சியில் வலிகள் உதிரும்.

முடிந்தால் நினைவுகளை 

இழக்கச் சாபமிடுங்கள்.

யாருமற்றிருப்பதாக உணர்கையில்

உடன் எவரேனும் தேவைப்படுகிறார்.

எல்லாம் இருக்கும் போது

எவரையும் நினைக்கத் தோணுவதில்லை.

மூர்க்கமான பிரிவின் அதிர்வுகள் உணரப்படுவதில்லை.

மௌனமான விலகுதல்

பெருவலி மயமானது.


[ 05/12/2025, 4:16 am]

சம்பூர் வதனரூபன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்