பழைய கனவுகளின்
மிச்சத்தைக் காணவே விரும்புகிறேன்.
எவ்வளவு இறுக மூடினாலும் வரவில்லை.
அது இன்னும் முடிவடையவுமில்லை.
அவளுக்கும் அப்படித்தான் இருக்குமோ தெரியாது.
அவள் அதன் முடிவுறாத எதிர்பார்ப்புகளை கைவிட்டு விட்டும் கூட வாரலாம்.
புதிய எண்ணங்களுக்கான எதிர்பார்ப்புகளை என் மனதில் புதைப்பாள்.
பழைய கசப்பை துப்பிவிட்டு
இம்முறை
புதிய இனிப்புகளைத் தின்ன முடியுமெனவும் காதுகள் ஊறிக்கிடக்கின்றன.
நேற்றையதோடு முரண்படவும்
இன்றையதைச் சிலாகித்து பேசவும் நாளையதை திணிக்கவும் வருவாள்
எனவும் கூட நினைத்திருக்கிறேன்.
தெளிந்து கொண்டேன்
இரத்தம் எப்போதும் சிவப்பு.
அதனால் அவளிடம் சில நிமிட மௌனத்தை மட்டும் விட்டுச்செல்வேன்.
போதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக