வானை கடந்து செல்ல முயற்சிக்கும்
பறவையின் நிழல்
முகத்தில் அறைகிறது.
தலைக்கு மேலிருந்த காகம்
அதன் அழுகையை
எனக்காக விடுச்சென்றது.
பூங்காவின் நடைபாதையில்
காலடிகளின் ஆயுளை எண்ணுகிறேன்.
நினைவு தப்பித் தப்பி
இப்பொழுதுகளில்
நீ வந்து போகிறாய்.
மறக்கப்படுதல் சுலபமானது என்பதை
பொங்கிய கடலலையின்
இன்றைய அமைதி அறிவிக்கிறது.
இப்போது காதல் என்ற சாக்கில்
கவிதைகளையெல்லாம்
பறிகொடுப்பது வழக்கமாகி விடுகிறது.
[04/12/2025, 10:41 am]
சம்பூர் வதனரூபன்
siraippu.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக