தூணிலும் துரும்பிலுமாகத் தேடி
காணாது
கடவுளை சந்திக்க கருவறைக்கே சென்றேன்.
முக்காரமிட்டு வழிமறித்த மாடு
மதிய உணவு முடித்த சுவாமி இப்போது தான் துகில் கலைத்துத் துயில்கிறார் என்றது.
தகவலை சொல்லி அர்ச்சிக்கத் தேட பல்லிடுக்கிருந்த பருப்பை கிளறித் துப்பி
நெய் முதுகில் வழிய குரு மடப்பள்ளி அறையுள் புகுந்தார்.
திரும்ப
வாசலில் தகாதென கழன்ற செருப்புகள் சிரிக்கதலை குனிய அணிந்து வேறோரு கருவறைக்கு ஓடினேன்.
மறுநாள் பரீட்சை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக