உனக்கான பேரன்பு
பெருக்கெடுக்கும் போது
ஊமையின் பலவீனமான உடல்மொழி
வலுவிழந்து தான் போயிற்று.
உரிமையற்ற உறவில்
பயனற்ற உணர்வுகள் மதிப்பிழத்தல்
மிகச் சாதாரணமானது.
எனக்காக நீ இல்லை. என்பதை
நான் உணர்வது போல
நீயும் உணரும் வரை
நான் உன்னோடு தான் இருப்பேன்.
சம்பூர் வதனரூபன்
[01/11/2025, 6:58 pm]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக