மாற்றங்களை சகித்தபடி நகர்தல்
கட்டாயக் கடினம்.
உனது மாற்றங்களையும் அவ்வாறே.
ஆனாலும்
மனநாக்கு நுனிக்கரும்பில் சப்பிக்கொண்டே
முன்னைய
அடிக்கரும்பு ஆனந்தக் கணம் பற்றி அசைபோடும்.
உன் தவிர்தலின் நியாயம் பற்றியும்
விலகியோடலின் விளக்கத்தையும் புரியாமலில்லை
ஆனாலும் பாவம் மனதுகள்.
இதுவரை
என் சந்தோசக் குவியலில்
நீ மட்டுமே மீதியாயிருந்தாய்.
சூனியங்களுடனான போராடுதலில்
நிழல் வாழ்வொன்றின்
உண்மை உறைக்க தப்பித்தாய்.
வாழ்வின் இயல்பையும்
சூழ்நிலைகளின் அதிகாரத்தையும் ஜெயிக்கவிட்டு
மற்றொரு பருவகால அழைப்புக்காக காத்திருக்கிறேன்.
வெறுமை கவ்விக்கொண்ட.
ஒருவனது விடியலுக்காக கூவிக்கொண்டிருந்த காகமும்
இருளில் கரைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக