ஞாயிறு, 7 டிசம்பர், 2025

நினைவிழத்தல்

 

இன்றைய காலை என்னை

சில துளிக் கண்ணீருடன் எழுப்பியது.

மனிதர்கள் இலகுவில் மறக்கக்கூடியவர்கள்.


என்னை மிகவும் நேசித்த 

என் பாட்டி  

நினைவை இழந்திருந்தாள்.

நான் இன்னும் அறியாது

வேறு சிலரும் இருக்கலாம்.


சுயமிழத்தல் மிக கொடுமையானது

அதுவொரு நிர்வாண மனதிற்கான சாட்சி. 

காலம் மிகவும் சுதந்திரமானது.

தன்னை அதுவே தீர்மானிக்கிறது.


13/08/2025.   5.23am

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்