செவ்வாய், 9 டிசம்பர், 2025

நூறு வரிகளை எழுதுகிறேன்.

ஒற்றை வரியிலும் 

நீ.. அவள்.. இல்லாமலில்லை.


பேசும்போதெல்லாம்

எப்போதும் இல்லாதவாறு

பதற்றமாகிவிடுகிறது.

நினைத்து வந்தவை நிலைதடுமாறி விடுகின்றது.

கண்களைக் காண்பதில் அதிக கவனமெடுக்கிறேன்..

காலத்தையும் விதியையும் விசுவாசித்தேன்.

 

கடவுளை

அதுவரை நம்பிராத காதலையும் நம்பினேன்.

மனதின் ஒலியை மொழியாக்கவும்

கனவின் அர்த்தத்தை காட்சிகளில் தேடவும் பழகினேன்.


இன்றுவரை

உன்னை புரிந்து கொள்ளவும் 

நல்லதொரு கவிதையை எழுதவும் தான்

முடியவில்லை.


பகிப்படும் முத்தங்களுக்கு வயதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்