ஞாயிறு, 7 டிசம்பர், 2025

சுயம் எல்லை கடத்தல்

 

உழிகளில் ஆதியில் அழுத கடல் 

உப்பைத் தொலைத்திருந்தது.

என்னிடமிருந்த கொஞ்சத்தையும் கரைத்துவிட்டு வந்தேன்.

கூட்டத்தில் தொலைந்த மீன் நன்றி சொல்லிப் போனது.

நதிகளின் புணர்வாய் பிரவாகிக்கின்றது என் மீழெழல்.

கடல் மீதான நதியின் மீறல் 

சுகமான சுயமிழத்தல்.

இதில் கடலின் அதிகாரத்தை எங்கென்று  நிறுவுவது.

அது சிலபொழுது கரைமீறும் பொங்கிப் பூதமாகும் 

முந்தும் பெருங்கடலை புணரும் 

தனக்குள்ளும் அடங்கும் ஆறும்.

எனினும் ஆற்றுவாய் சப்புதலில் பொங்கி வழியும் நுரைகளைப் பூசி 

உயிர்க்கும் தக்கை மீன்களை வெண்புள்ளின் அலகில் கோதி பேரலை வீசியழித்து ஓயும்.

எறியபட்ட அலுமினிய ஏந்திகளை பொறுக்கியவனின் முகத்தில் போதையின் வண்ணம் அப்பித் ததும்ப

போதைத் திராவக ஆதிக்கம் 

சிலநொடி மூத்திரத் தெறிப்புடன் முற்றும். எனினும் வெற்றுத் திண்மங்களின் வேண்டுகை மற்றொரு திராவகத்துக்கான துமிவரை நீழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்