சிதைந்த கனவொன்றை முடிக்க
காப்பரண் திட்டுகளிலும் இடற
நொறுக்கிய தேங்காய்ச் சில்லுகளும்
வறுத்த சீனிமா முடிச்சும்
கன்வஸ் கூடாரமும்
கனவுகளில் வந்து கண்கள் கசிந்தன.
இதுவரை நினைவில் தொலைந்திருந்த
செல் அடிக்கு பாதியாய் மடிந்து
மனதை பதறவிட்ட மணி மாமியும்
ஊரை விட்டு ஓடுகையில்
பாதையின் குறுக்கே சிதறிக்கிடந்த
யாரோ சிறுவனும் தாயும்
கனவின் வந்து சித்திரவதை செய்ய
விழித்தேன்.
யுத்தகாலச் சொற்களை
மீண்டும் நினைவின் தளத்தில்
குவிக்க தொடங்குமோ காலம்.
[14/11/2025, 10:09 pm]
சம்பூர் வதனரூபன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக