ஞாயிறு, 7 டிசம்பர், 2025

 







அந்தரித்த சிலந்தி ஒன்று.

தன்னைத் துப்பியும் 

தன்னைத் தானே விழுங்கியும்

சட்டெனத் தொங்கி 

விழாதபடி விழுந்து

நீட்டியிருந்த எனது

ஒற்றை விரலைப் பற்றிக்கொண்டது.

கைகளின் எல்லைக்குள்ளிருந்து 

மீற முடியாமல் 

ஓடி ஓடி அலைந்து

தொடர் அறுந்திடாமல் இருக்க

தன்னை இழந்து இழந்து 

வலை பின்னிக்கொண்டே 

கையைச் சிறைப்பிடித்தது.

முடிவில் அதன் வாழ்வெளி முழுவதும் 

கைக்குள்ளே சிக்கிக்கொண்டது

 

சம்பூர் வதனரூபன்

[05/11/2025, 5:12 pm]

https://siraippu.blogspot.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்