செவ்வாய், 9 டிசம்பர், 2025

கொஞ்சம் பொறுங்கள்

எங்களுக்கு இன்னும் கொஞ்சம் 

அவகாசம் வேண்டும்.


இப்போதுதான் நாங்கள் 

எங்கள் வேர்களில் இருந்து 

மீண்டும் கிளைக்கிறோம்.

அதற்குள் உங்கள் கோடரிகளை 

எங்கள் காடுகளுக்குள் 

நுழைக்க வேண்டாம்.


அவசரத்தில் கூச்சலிட்டு 

உங்கள் ஒலி அறியா குஞ்சுகளை 

முன்னைய தடவைகளை போல

கலவரபடுத்தாது 

கீச்சிட்டு நாலா திக்குகளிலும்

சிதறடிக்காது இருங்கள்


[02/12, 2:47 pm]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்