ஞாயிறு, 7 டிசம்பர், 2025

இழப்புகளின் மாதம்

 

கார்த்திகை போராட்டம் நிறைந்தது .

போர்க்குணம் மிக்க 

இந்த நாட்களில் போராடுவதே 

வாழ்வின் நியதி என்றாகியது  .


இந்தப் பருவமழை 

இவ்வளவு அழுதிருக்கக் கூடாது.

மண் மலைகளைக் கரைத்து 

மனித உடல்களை குவித்திருக்கிறது.


நீரைப் பெருக்கி

முழு நிலத்தையும் விழுங்கியது.

பருவம் பொய்த்த மழைக்கு

பாவி என்று பெயர் வைத்தார்கள். 

ஏழை வாழ்வை நிர்க்கதியாக்கி ஓய்ந்தது. 


வெயிலுக்கு இல்லாத வல்லமையோடு

வீசும் காற்றில் மோதி 

வலி உணர்த்தி  மனிதம் சிதைத்து 

கிழித்த வடுக்களோடு

இயற்கை மல்லுக்கட்டி நிற்கிறது.


இயல்பில் இதம் தந்த பூதங்களும்

பழி தீர்க்கும் பகையோடு அழித்தன.

காலம் மீழ்வதற்கு ஏற்ப நெகிழ்வானது.


(30/11/2025.  10.12 pm)

சம்பூர் வதனரூபன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்