சினேகப்பறவையொன்று
தன் கூட்டிற்கே திரும்பியது
இறக்கைகளை இழந்து.
இறக்கை அற்றதும் வாழ்வெனினும்
இறக்கைகள் என்பது வாழ்வாதாரம்
சுதந்திரக் குறியீடு
விட்டாத்தி உணர்வின் அடையாளம்.
அடைப்பற்ற மகிழ்ச்சி வெளி.
கனவுகள் மெய்படும் போது
அதுவரை உடனிருந்த சில நனவுகள்
பழைய நினைவுகளாக மாறிவிடுகின்றன.
[11/11/2025, 5:10 pm]
சம்பூர் வதனரூபன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக