வியாழன், 23 அக்டோபர், 2008

அவளைப்போல


அங்கே அலைகளுக்குப் போட்டியாக
தம் பாதப்பதிவுகளை
பாதுகாக்கத் துடிக்கும்
ஆயிரம் சோடிக் காதலர்கள்

என் கன்னத்துத்
தாடிக்குத்
தலை சீவிக்கொண்டது
ஞாபகச்சீப்பு

நான் சட்டைப்பொத்தான்களை
பூட்டத்தொடங்கியதும்
என் முகத்தைச் சவரக் கத்திக்கு
அறிமுகப்படுத்தியதும்
அவள் எனக்கு அறிமுகமான
பிறகுதான்

என் கண்ணைப்
பார்த்துக்கொண்டே
அவள் பொட்டுவைப்பதும்
அவள் கன்னத்தைப்
பார்த்து நான்
தலைசீவிக்கொண்டதும் அப்போது

நான் ‘அலைகள் ஓய்வதில்லை’
பார்த்தது முதலாய்
அவளில் காதல்கொண்டவன்

அவள் ‘அலை பாயுதே’
பார்த்ததும்
என்காதலை வெறுத்தவள்

ஆற்றுப்படுகையாக
எங்கள் மனக்கலப்பும் ஆவியுயிர்பாய்
மனக்கலைப்பும் எங்களில் முடிந்தது

இந்த கொஞ்சநாட்களாய் தான்
கடற்கரை ஓர காலடிபோல்
என் காதல்ஞாபங்கள்
மெதுவாய் கரைந்து கொண்டிருக்க

அதற்குள்...

மீண்டும் அலைகளுக்கு போட்டியாக
ஆயிரம் காதலர்கள் அங்கே
இங்கு என்னைப்பார்த்து
ஒரு அலைநண்டு சிரிக்கிறது
நுரைக்குள் ஒளிந்துகொண்டு

அவளைப்போல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்