கூட்டம் கூட்டமாய்
வெள்ளை மேகங்கள்
அதனிடையே
ஒளிந்தொளிந்து போகும்
ஒற்றை நிலவாய்
எனக்குப்பிடித்த உன்முகம்
அவ்வப்போது தோன்றிமறையும்
வானவில்களாக
அவசர அவசரமாய் உள்நுழையும்
உன் வகுப்பு ஆசிரியைகள்
வெடுக்கு வெடுக்கெனத்
திரும்பிக்கொண்டு
மின்னல் தீயாய்
அங்கும் இங்குமாய்
குறுக்கிடும் உன் அதிபர்
அதற்கிடையே
இடி இடித்து ஓய்வது கணக்காய்
உன்னை அழைக்கும்
ஒன்றுகூடல் மணிஓசை
மழைக்கு வானம்பார்க்கும்
உழவனாய்
உன் வருகைக்காக
வெளியே காத்திருக்கும் நான்
என் எல்லாவித எதிர்பார்ப்பையும்
உடைத்தெறிந்து விட்டு
உற்றுப்பார்க்கும் சூரியனாய்
வாயிலில் முறைத்தபடி
காவலாளி.
வியாழன், 23 அக்டோபர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக