கழுத்தை நெரிக்கும் விலகலின் பின்நாளில்
கோடைக்கிழங்கென உயித்தெழுந்து .
தென்னை வண்டாக
நீ ஆழம் அறுத்த துளிரிலிருந்து
பூச்சொரிகிறேன்.
கண் சுருக்கும் காலை வெயில் கீற்றாக
மற்றொரு தரம்
முகம் கீறாமல் போ.
[07/11/2026, 07:30]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக