இன்னும் எதற்காக
பொய்யையும் போலிகளையும் கைந்நிறைய அள்ளிக்கொண்டு மீண்டும் என்னிடமே தர வருகிறாய்.
நிராகரித்தல் என்பது மறப்பதல்ல. வெறுப்பதுமல்ல.
வேண்டாததை குப்பையில் போட்டுவிடுவது.
சில தருணங்கள்
எவ்வளவு சுலபமாக நிகழ்ந்து விடுகிறது.
எல்லாமுமாக இருந்த ஒன்றை இழந்து
மீள்தல்
என்பதன் வலிமை வன்மமானது.
எல்லாமுமானது ஏதுமற்றதாகையில்
கடந்து வந்தவைகளும்
இப்போது எதுவுமற்ற வெளி.
06/11/2026, 22:43